
MAG சோட்டா பம்பு கண்ட்ரோல்
1 ஓவர்லோடு
மோட்டார் பம்புகளில் பிடிப்பு ஏற்படும் போது ஓவர்லோடு ஆகும்.
2 பேஸ் பெயிலியர் / ம்பேலன்ஸ் வோல்டேஜ்
ஒரு லைன் கட்டாகும் போதும், ஒரு லைன் வோல்டேஜ் குறைவாகும் போதும், . மற்றும் ஃபேஸ் to ஃபேஸ் 60 வோல்டேஜிக்கு மேல் வந்தால் மோட்டாரை தானாக இயங்கி ஆஃப் செய்து விடும்
3. ட்ரை ரன்
மோட்டார் ஓடும் பொழுது தண்ணீர் வராமல் இருந்தால் அதுவே ட்ரை ரன், ஆகும்.
4. ஹை வோல்டேஜ்,
இடி மின்னல் மற்றும் லைனில் ஷார்ட் ஆகும்போது ஹை வோல்டேஜ் வரும்.
5. லோ வோல்டேஜ்
சரியான வயர்களை தேர்ந்தெடுக்காமல் இருந்தாலும், வயர்களில் அதிகமான சேதம் ஏற்பட்டு இருந்தாலும் மற்றும் தண்ணீர் இல்லாமல் வெறும் மோட்டார் ஓடினாலும் லோ வோல்டேஜ் ஆகும்.
MAG சோட்டா பம்பு கண்ட்ரோல் ஆனது மேலே உள்ள பாதிப்புகளிலிருந்து மோட்டாருக்கு ஒரு முழு பாதுகாப்பை அளிக்கிறது.
MAG சோட்டா பம்பு கண்ட்ரோல் பயன்கள்.
1. கரண்ட்டு சென்று வரும்போது 3 லைன் சரியாக இருந்தால் தானாக இயங்கி மோட்டாரை ஆன் செய்து விடும் மற்றும் ஒரு லைன் கட் ஆகும் போது அல்லது பழுதாகும் போது உடனே மோட்டாரை ஆஃப் செய்து விடும்.
2. ஒவ்வொரு முறையும் மோட்டாரை ஆன் செய்யும்போது தானாக தொடக்க 2 முதல் 999 வினாடி வரை தாமதம் செய்து மோட்டாரை ஆன் செய்யும் வசதி உள்ளது. ( உதாரணமாக தாமதம் 10 வினாடி செட்டிங் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் )
3. டேங்கில் தண்ணீர் முழுமையாக நிரம்பும் போதும் மற்றும் போர்வெல் அல்லது நிலத்தடி தொட்டியில் தண்ணீர் இல்லாத போதும் தானாக ஆஃப் ஆகிவிடும்.
4. ஒரு புளோட் சுவிட்ச் இருந்தாலே போதும் ஆன் மற்றும் ஆஃப் ஆட்டோமேட்டிக்காக வேலை செய்யும் தன்மை உள்ளது.
5. மோட்டார் ஓடும் நேரம் 1 முதல் 999 நிமிடங்கள் வரை , காத்திருக்கும் நேரம் 1 முதல் 999 நிமிடங்கள் வரை என்ற பதிவு முறையில் பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். ( உதாரணமாக 120 நிமிடங்கள் மோட்டார் ஓடும் நேரம். மற்றும் மோட்டார் ஆப் செய்திருக்கும் நேரம் 100 நிமிடங்கள் என்ற முறையில் செட்டிங் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.)
6. சர்ஜி புரோடெக்ட் ஆனது மின்னல் மற்றும் லைன் ஷார்ட் ஆகும்போது ஏற்படக்கூடிய மின் அழுத்தத்தில் இருந்து பம்ப் கன்ட்ரோலரை பாதுகாக்கிறது.
7. மேனுவல் அண்ட் ஆட்டோ மோடு என இரண்டு வகை செலக்டர் சுவிட்ச் உள்ளது அதில் ஆட்டோ மோடில் இருந்தால் தான் புளோட் சுவிட்ச்க்காக பம்பு கண்ட்ரோலர் வேலை செய்யும்.
MAG சோட்டா பம்ப் கன்ட்ரோலர் . LED Display ( 1HP முதல் 20HP வரை ) அனைத்து வகையான DOL Single Phase / DOL Three Phase /STAR DELTA. ஸ்டார்டர் மற்றும் சர்ஜ் ப்ரொடெக்டரும் சேர்ந்து கிடைக்கும்.
MAG சோட்டா பம்பு கண்ட்ரோல் ஆனது உயர் தரமான பொருள்களின் மூலம் அதிநவீன உற்பத்தி மற்றும் கடுமையான சோதனை செய்த பிறகு தான் விற்பனைக்கு வருகிறது.
MAG சோட்டா பம்பு கண்ட்ரோலரை விவசாயம், தொழிற்ச்சாலை, பள்ளிக்கூடம், அடுக்குமாடி குடியிருப்பு, மருத்துவமனை, மற்றும் கிராம நகர பொதுகுடிநீர் மோட்டாருக்கு பயன்படுத்த ஏற்றது.
நீரை சேமியுங்கள்.
ஆற்றலை சேமியுங்கள்.
பணத்தையும் சேமியுங்கள்.